உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மதுரை மத்திய சிறையில் தலைமை காவலர் மீது கைதி தாக்குதல்

மதுரை மத்திய சிறையில் கைதி தாக்கியதில் தலைமை காவலர் தெய்வநாயகத்தின் வலது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது.

மதுரை மத்திய சிறையில் குடிநீரில் குளிக்க முயன்ற கைதியைத் தட்டிக்கேட்ட தலைமை காவலர் தெய்வநாயகத்தை கைதி தாக்கியதில், அவரது வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மதுரை மத்திய சிறையில் தலைமை காவலர் மீது கைதி தாக்குதல்

மதுரை மத்திய சிறையில் 2,500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு கைதிகள் குளிப்பதற்கு ஆழ்குழாய் நீர் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், மூர்த்தி என்ற கைதி குடிநீருக்காக ஒதுக்கப்பட்ட தண்ணீரைப் பிடித்து குளிக்க முயன்றுள்ளார். இதனைப் பார்த்த தலைமை காவலர் தெய்வநாயகம், குடிநீரை வீணாக்கக் கூடாது எனக் கண்டித்து, கைதியிடமிருந்த வாளியைப் பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த கைதி மூர்த்தி, தலைமை காவலரின் முகத்தில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் தலைமை காவலரின் வலது கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் காயமடைந்த தெய்வநாயகம், சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், இச்சம்பவம் தொடர்பாகச் சிறைத்துறை உயர் அதிகாரிகள் மூர்த்தியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவத்தால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50