திருநெல்வேலி மாவட்டம், புலியூர்குறிச்சி மெயின் ரோட்டில் பெண் ஒருவர் தனது குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது கருப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், அவரது கழுத்தில் இருந்த 15 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து பெண் ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினர். மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இதையடுத்து சவளைக்காரன் குளத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடமிருந்து பறிக்கப்பட்ட 15 சவரன் தங்க நகையையும் மீட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணிடம் 15 சவரன் நகை கொள்ளை - குற்றவாளி கைது
ஏர்வாடியில் பெண்ணிடம் 15 சவரன் தாலிச் செயின் பறித்த இளைஞரை 48 மணி நேரத்தில் கைது செய்து நகையை போலீசார் மீட்டனர்.
ஏர்வாடி அருகே பெண்ணிடம் 15 சவரன் தாலிச் செயின் பறித்துச் சென்ற சவளைக்காரன்குளத்தைச் சேர்ந்த அருண்குமாரை போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்து நகையை மீட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




