உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

இராசிபுரத்தில் நடுரோட்டில் போதை ஆசாமி – வாகன ஓட்டிகள் அவதி

இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே மது போதையில் நடுரோட்டில் படுத்துக் கிடந்த நபரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில் மது போதையில் சாலையின் நடுவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக படுத்துக் கிடந்த நபரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவருக்கு உதவ யாரும் முன்வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
இராசிபுரத்தில் நடுரோட்டில் போதை ஆசாமி – வாகன ஓட்டிகள் அவதி!

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே வேல்முருகன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டல் அருகே செல்லும் சாலையின் நடுவே 60 வயது முதியவர் ஒருவர், அளவுக்கு அதிகமான மது போதையில் நிலைதடுமாறி சாலையில் விழுந்து கிடந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலையின் நடுவிலேயே அவர் படுத்திருந்ததால், அவ்வழியாகச் சென்ற இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். சாலையில் படுத்திருந்த நபரைச் சுற்றி வாகனங்கள் ஆபத்தான முறையில் கடந்து சென்றன.இந்நிலையில், அவரை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லவோ, உதவி செய்யவோ யாரும் முன்வராமல் கண்டும் காணாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நபருக்கு உரிய உதவி கிடைக்காதது சமூக அக்கறை குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளது

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50