திருவனந்தபுரம் அருகே பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷோபா, தனது முதல் கணவரைப் பிரிந்த பின்னர் விஷ்ணு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வசித்து வருகிறார். அவர் பெரும்பாலான நேரத்தை செல்போனில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதில் செலவிட்டு வந்துள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஷோபாவின் செல்போனை எடுத்துப் பயன்படுத்திய அவரது 6 வயது மகள், அதிலிருந்த வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளைத் தவறுதலாக நீக்கியுள்ளார். இதனால் கோபமடைந்த ஷோபா, மரக்கட்டையால் சிறுமியைத் தாக்கியதுடன், தரையில் தூக்கி வீசியுள்ளார். இதில் சிறுமியின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.இதையடுத்து, சிறுமி கட்டிலிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறி ஷோபா சம்பவத்தை மறைக்க முயன்றுள்ளார். இந்நிலையில், மருத்துவமனையில் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், காயங்கள் குறித்து சந்தேகமடைந்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், பாறசாலை மகளிர் போலீசார் ஷோபாவைக் கைது செய்தனர். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஷோபாவின் இரண்டாவது கணவர் விஷ்ணு ஏற்கெனவே சிறுமியைத் தாக்கியதில் அவருக்கு நான்கு தையல்கள் போடப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிய 6 வயது மகள் மீது கொடூரத் தாக்குதல் – தாய் கைது
சமூக வலைதள செயலிகளை நீக்கிய 6 வயது மகளை மரக்கட்டையால் தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் அருகே செல்போனில் இருந்த சமூக வலைதள செயலிகளை நீக்கிய 6 வயது மகளை மரக்கட்டையால் தாக்கிய தாயை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




