சென்னை ஆவடி அருகே அம்பத்தூர் பட்டரவாக்கம் தொழிற்பேட்டையில் தனியார் மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுதிர் கட்டி காந்தி என்பவர் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, பல்வேறு நிறுவனங்களுக்கு பொருட்கள் விநியோகம் செய்ததற்கான பணத்தை அனுப்பும் போது, அதில் ஒரு பகுதியை தனது வங்கிக் கணக்குக்கும், ஆந்திராவில் வசிக்கும் உறவினர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றியுள்ளார். இவ்வாறு 2021-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை சுமார் 45 வங்கிக் கணக்குகளுக்கு ரூ.8.21 கோடியை மாற்றி மோசடி செய்தது நிறுவனத்தின் கணக்குத் தணிக்கையில் தெரிய வந்தது. இதையடுத்து, நிறுவனத்தின் தற்போதைய மேலாளர் கார்த்திக் அளித்த புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதனைத் தொடர்ந்து, பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் பதுங்கியிருந்த சுதிர் கட்டி காந்தியை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பத்தூர் அருகே மருந்து நிறுவனத்தில் ரூ.8.21 கோடி கையாடல் – முன்னாள் மேலாளர் கைது
அம்பத்தூர் அருகே தனியார் மருந்து நிறுவனத்தில் ரூ.8.21 கோடி கையாடல் செய்ததாக முன்னாள் மேலாளர் சுதிர் கட்டி காந்தியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அம்பத்தூர் அருகே தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் மேலாளர் சுதிர் கட்டி காந்தி, வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.8.21 கோடி மோசடி செய்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




