உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

50 பவுன் நகை, பணத்துடன் மகனோடு மாயமான பெண்

50 பவுன் நகை, பணத்துடன் மகனோடு மாயமான மனைவியை கண்டுபிடிக்கக் கோரி கணவர் திருநெல்வேலி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலியில் சகோதரர் வீட்டுக்குச் சென்ற இளம்பெண் 50 பவுன் நகை, பணத்துடன் 7 வயது மகனை அழைத்துக் கொண்டு மாயமானதாகவும், இருவரையும் கண்டுபிடித்துத் தரக்கோரியும் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
50 பவுன் நகை, பணத்துடன் மகனோடு மாயமான  பெண்

தூத்துக்குடி மாவட்டம், ஆறாம்பண்ணையைச் சேர்ந்தவர் முகமது சாலி . இவர் அபுதாபியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா சம்சானா அப்ரிஸ். இவர்களுக்கு முகமது சயான் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், அக்டோபர் 1-ம் தேதி பாத்திமா தனது மகனுடன் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் உள்ள சகோதரர் முகமது ரியாசுதீன் வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டிலிருந்த 50 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளார். அங்கு மகனின் பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். பின்னர் அக்டோபர் 6-ம் தேதி மாலை ஆட்டோவில் ஆறாம்பண்ணையில் உள்ள வீட்டுக்குச் செல்வதாகக் கூறி மகனுடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு இருவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என முகமது சாலி குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், நகை மற்றும் பணத்திற்காக தனது மனைவி, மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த அவர், இருவரையும் கண்டுபிடித்துத் தரக்கோரி திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50