நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை அருகே தேவர்சோலையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான செயதலுவி, மோகன் ஆகிய இருவரும் கடிசனகொல்லி பழங்குடி கிராமத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, ஆட்டோவில் தேவர்சோலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையில் நின்றிருந்த காட்டுயானையைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும், ஆட்டோக்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இதில் இருவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து, காட்டுயானை செயதலுவியின் ஆட்டோவை முட்டித் தள்ளியதில் அது 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும், மோகனின் ஆட்டோவின் கண்ணாடியையும் யானை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சம்பவ இடத்திற்கு ஆய்வு செய்ய வந்த வனத்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்பகுதியில் சுற்றித்திரியும் காட்டுயானையைக் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
20 அடி பள்ளத்தில் ஆட்டோவை முட்டித்தள்ளிய காட்டுயானை
கூடலூர் தேவர்சோலை அருகே ஆட்டோவை காட்டுயானை முட்டித்தள்ளியதில் 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. ஓட்டுநர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சோலை அருகே சென்ற ஆட்டோவை காட்டுயானை முட்டித்தள்ளியதில், 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுநர் காயமடைந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




