விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே மாவட்ட குற்ற நுண்ணறிவு பிரிவு காவல் ஆணையர் ஜெரால்டு ராபின்சன் தலைமையிலான போலீசார், கோவுலாபுரம் கிராமத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில், அரசு பள்ளி அருகே குடியிருப்புப் பகுதியில் அனுமதியின்றி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் அவரது மனைவி சத்யா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கொரட்டூர் கிராமத்தில் ஏற்கனவே தீ விபத்து காரணமாக சீல் வைக்கப்பட்ட கட்டடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு பட்டாசுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், இரு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகளின் மொத்த மதிப்பு ரூ.4 லட்சம் எனத் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பட்டாசுகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் வீதிகளை மீறி நாட்டு பட்டாசுகள் விற்பனை
விதிகளை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான நாட்டு பட்டாசுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே விதிகளை மீறி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான நாட்டு பட்டாசுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




