தூத்துக்குடி மாவட்டம் சங்கரப்பேரி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீரமூர்த்தி. இவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த தங்க நகைகள் செப்டம்பர் 27ஆம் தேதி திருடப்பட்டன. இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், சிப்காட் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த விசாரணையின் அடிப்படையில், சென்னையை சேர்ந்த மணிகண்டன் , திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த பாலமுருகன், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரைச் சேர்ந்த சரண்யா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் 14 பவுன் நகைகள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடியில் நகை திருட்டு - மூவர் கைது
தலைமையாசிரியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து, 14 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் வீட்டில் நகை திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து, 14 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




