நாமக்கல் மாவட்டத்தில் ATM மையங்களில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் திருடியதாக, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 361 வங்கி ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வேலூர் மற்றும் பரமத்தி வேலூர் காவல் நிலைய எல்லைகளில் நடைபெற்ற ATM மோசடி தொடர்பாக, சந்தீப், கரம்வீர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் ATM மையங்களில் பணம் எடுக்க வரும் பொதுமக்களுக்கு உதவுவது போல் நடித்து, அவர்களின் ரகசிய PIN எண்ணைக் கவனித்துத் தெரிந்துகொள்வார்கள். பின்னர், பொதுமக்களின் அசல் ATM கார்டுகளுக்குப் பதிலாக வேறு கார்டுகளைக் கொடுத்து, அசல் கார்டுகளைப் பயன்படுத்திப் பணத்தைத் திருடியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாகத் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் இருவரையும் கண்டறிந்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் ATM பயன்படுத்தும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்லில் ATM மோசடி – ஹரியானாவைச் சேர்ந்த இருவர் கைது
ATM மையங்களில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் திருடியதாக, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ATM மையங்களில் பொதுமக்களை ஏமாற்றிப் பணம் திருடியதாக, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 361 வங்கி ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




