சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கும் இவரது தம்பி பாலசுப்பிரமணியனுக்கும் இடையே குடும்பப் பிரச்சனை காரணமாகத் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், இன்று காலை இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த தம்பி பாலசுப்பிரமணியன், தனது அண்ணன் சங்கரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சங்கர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, பாலசுப்பிரமணியன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதை தொடர்ந்து, கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
குடும்ப பிரச்சனையில் அண்ணனை தம்பி கத்தியால் குத்தி கொலை - தம்பி கைது
குடும்பப் பிரச்சனையில் சொந்த அண்ணனைத் தம்பி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர் குடியிருப்பில், குடும்பப் பிரச்சனையில் சொந்த அண்ணனைத் தம்பி கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




