திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொழிஞ்சிவாடி கிராமத்தில் உள்ள 137-வது வார்டு எண் கொண்ட வாக்குச்சாவடியில் தங்கமணி என்பவர் தேர்தல் அலுவலராக பணியாற்றினார். இந்நிலையில், இவர் வாக்குச்சாவடிக்கு வந்த மூதாட்டி ஒருவரிடம், விசில் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு தங்கமணி கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாற்றுக் கட்சியினர் தேர்தல் அலுவலருடன் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, புகாருக்கு ஆளான தேர்தல் அலுவலர் தங்கமணி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு பதிலாக ராஜம்மாள் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு அங்கு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.
வாக்காளரிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கூறிய தேர்தல் அலுவலர் மீது புகார்
கொழிஞ்சிவாடி கிராமத்தில் உள்ள 137-வது வாக்குச்சாவடியில் வாக்காளரிடம் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க கூறிய தேர்தல் அலுவலர் மீது புகார் எழுந்து தேர்தல் அலுவலர் தங்கமணி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே, வாக்காளரிடம் குறிப்பிட்ட கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு தேர்தல் அலுவலர் கூறியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




