தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி விலகக் கோரி, பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி இண்டி கூட்டணி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர். அப்போது, பார்லிமென்ட் சாலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், தடுப்புகளை மீறி போராட்டம் நடத்திய லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் எம்பி பிரியங்கா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் கார்கே, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல எம்.பி.க்களும் கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும், வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பியுள்ளன.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்ததோடு, தேர்தல் கமிஷனுக்கு எதிரான இண்டி கூட்டணியின் பேரணியை பாஜக கடுமையாக விமர்சித்துள்ளது. அமைதியின்மை சூழலை உருவாக்குவதையும், ராகுலை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவதையும் இந்த பேரணி நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது அந்த முயற்சியின் ஒரு பகுதியாக ஜனநாயக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டில்லியில் தலைமை தேர்தல் கமிஷனரை பதவி விலகக் கோரி பேரணி - ராகுல், பிரியங்கா கைது
டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்கிரஸ் எம்பி பிரியங்கா கைது செய்யப்பட்டனர்.
டில்லியில் தேர்தல் கமிஷனருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கைது செய்யப்பட்டனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




