சென்னையில் மெட்ரோ இரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில், திருமங்கலம் பகுதியில் 12 மாடி கட்டிடத்தின் வழியாக மெட்ரோ இரயில் செல்லும் பிரம்மாண்ட திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப்புதிய திட்டம் அமைக்கப்படுகிறது. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில் உள்ள திருமங்கலம் பகுதியில் சுமார் 3.85 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் நான்கு கோபுரங்களுடன் கூடிய சுமார் 6.85 லட்சம் சதுர அடி பரப்பளவிலான வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்தக் கட்டிடத்தின் 4-வது முதல் 6-வது தளங்களுக்கு இடையே ஓட்டுநர் இல்லா மெட்ரோ இரயில்கள் நேரடியாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிடத்திற்குள் மெட்ரோ இரயில் நிலையம், அலுவலகங்கள், வணிகக் கடைகள் மற்றும் மூன்று அடுக்கு நிலத்தடி வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட உள்ளன.இந்தத் திட்டத்தை ரூ.446.88 கோடி மதிப்பில் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை கெப்பாசிட்டி இன்ஃப்ராப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, பணிகள் தொடங்கிய நாளிலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டுமானத்தை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.446 கோடி ஒப்பந்தம் – சென்னையில் 12 மாடி கட்டிடத்திற்குள் செல்லும் மெட்ரோ இரயில்
சென்னை திருமங்கலத்தில் ரூ.446 கோடி செலவில் 12 மாடி வணிகக் கட்டிடத்திற்குள் மெட்ரோ ரெயில் செல்லும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக திருமங்கலத்தில் ரூ.446 கோடி செலவில் 12 மாடி வணிகக் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதன் வழியாக மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




