உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

ராசிபுரத்தில் புதிய அரசு மருத்துவமனை 4 மாதங்களில் திறப்பு - அமைச்சர் அருண்ராஜ்

ராசிபுரத்தில் ரூ.53.39 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனை 98 சதவீதம் நிறைவடைந்துள்ளது. நான்கு மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ரூ.53.39 கோடியில் 300 படுக்கைகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய அரசு மருத்துவமனைப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளன. நான்கு மாதங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
ராசிபுரத்தில் புதிய அரசு மருத்துவமனை 4 மாதங்களில் திறப்பு - அமைச்சர் அருண்ராஜ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த அனைப்பாளையத்தில் ரூ.53.39 கோடி மதிப்பீட்டில் 300 படுக்கை வசதிகளுடன் 6 தளங்களைக் கொண்ட புதிய அரசு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், மருத்துவமனை கட்டுமானப் பணிகள் 98 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கூடுதலாக ரூ.5 கோடி நிதி கோரப்பட்டுள்ளதாகவும், இதற்கான நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதை தொடர்ந்து, விரைவில் அரசாணை வெளியான பிறகு, நான்கு மாதங்களில் மருத்துவமனை திறக்கப்படும் என்றும் தெரிவித்தார். இங்கு அவசர சிகிச்சை, குழந்தைகள் தீவிர சிகிச்சை உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகள் அமைய உள்ளன.மேலும், தமிழகத்தில் 4,724 செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், 284 உயர்சிறப்பு மருத்துவர்களுக்கான புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பின்னர், கடலூரில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50