கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சியைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மகன் ஜெபமணி. இவர்களது பக்கத்து வீட்டில் வசித்து வந்தவர் மாற்றுத்திறனாளியான ஆல்பர்ட் அஸ்வின். இவர் அடிக்கடி மதுபோதையில் குழந்தைவேல் மற்றும் அவரது மகன் ஜெபமணியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ஆல்பர்ட் அஸ்வின், ஜெபமணியின் வீட்டுச் சுவரை சேதப்படுத்தியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் அளிப்பதற்காக ஜெபமணியின் தந்தை குழந்தைவேல் சென்றுள்ளார். அப்போது கோபமடைந்த ஆல்பர்ட் அஸ்வின், குழந்தைவேல் மீது பாமாயிலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த குழந்தைவேல் பரிதாபமாக சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் முதியவரை எரித்துக் கொலை செய்த ஆல்பர்ட் அஸ்வினை கைது செய்தனர்.
மார்த்தாண்டத்தில் முதியவரை உயிருடன் எரித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது
மார்த்தாண்டத்தில் சுவர் சேதப்படுத்தியது தொடர்பாக புகார் அளிக்கச் சென்ற முதியவர் குழந்தைவேலை தீ வைத்து எரித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் சுவர் தகராறு காரணமாக புகார் அளிக்கச் சென்ற முதியவர் குழந்தைவேலை பாமாயில் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்ற பக்கத்து வீட்டுக்காரர் ஆல்பர்ட் அஸ்வினை போலீசார் கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




