உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மயிலாப்பூரில் 54 சவரன் நகை, ரூ.15 லட்சம் திருட்டு – வீட்டு பணிப்பெண் கைது

சென்னை மயிலாப்பூரில் 54 சவரன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் திருடிய வீட்டு பணிப்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் வீட்டில் 54 சவரன் நகைகள், ரூ.15 லட்சம் பணம் திருடிய வீட்டு பணிப்பெண் மணிமேகலையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மயிலாப்பூரில் 54 சவரன் நகை, ரூ.15 லட்சம் திருட்டு – வீட்டு பணிப்பெண் கைது!

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பத்மா. இவர் ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி. இவரது வீட்டில் மணிமேகலை என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நீண்டகாலமாக பணியாற்றியதால் அவர் மீது குடும்பத்தினர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில், வீட்டில் இருந்த 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 லட்சம் பணம் திடீரென மாயமானது. இது குறித்து பத்மா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படியில், மயிலாப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் மணிமேகலையிடம் விசாரித்த போது திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், கணவரின் மருத்துவச் செலவு மற்றும் குடும்பத் தேவைகளுக்காக ரூ.24 லட்சம் வரை கடன் வாங்கியதாகவும், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் இந்தத் திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50