உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

காரில் 243 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது - ரூ.2.75 லட்சம் பறிமுதல்

நாலாட்டின்புதூரில் காரில் 243 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டு, ரூ.2.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி நாலாட்டின்புதூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தப்பட்ட 243 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள், ரூ.2.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
காரில் 243 கிலோ புகையிலை பொருட்கள் கடத்திய இருவர் கைது - ரூ.2.75 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின்புதூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில் சட்டவிரோத விற்பனைக்காக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவது தெரிய வந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸன் அலி மகன் அம்மர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 243 கிலோ புகையிலைப் பொருட்கள், கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்து 800 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இருவர் மீதும் புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50