உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினர் அடித்துக் கொலை – தொழிலாளி கைது

மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினரை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்ற தொழிலாளி கன்னியப்பனை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை அருகே மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினர் பாண்டியனை இரும்புக் கம்பியால் தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக தொழிலாளி கன்னியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
மனைவியிடம் தகராறு செய்ததை தட்டிக்கேட்ட உறவினர் அடித்துக் கொலை – தொழிலாளி கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் தனது மனைவி பிரியதர்ஷினியுடன் வெறையூர் அருகே பெருமணம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் பாண்டியனின் உறவினரான கன்னியப்பன் என்பவரும் தனது மனைவி கல்பனாவுடன் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், கன்னியப்பன் அடிக்கடி மதுபோதையில் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனை பாண்டியன் தட்டிக்கேட்டதால் கோபமடைந்த கன்னியப்பன், அவரை ஆபாசமாகப் பேசி இரும்புக் கம்பியால் சரமாரியாகத் தாக்கினார். இதில் படுகாயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

320 × 50