காஞ்சிபுரம் மாவட்டம் பொற்பந்தல் கிராமத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், 342 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இக்கடையின் மூலம் அப்பகுதி மக்கள் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில், ரேஷன் கடையின் கூரை மற்றும் சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், கட்டடத்தின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து உதிர்ந்து விழும் நிலையில் உள்ளன. இதனால், ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களுக்கும், கடையில் பணிபுரிவோருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து, மழைக்காலங்களில் கூரை வழியாக மழைநீர் உள்ளே புகுந்து, ரேஷன் பொருட்கள் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டடம் தொடர்ந்து சேதமடைந்து வருவதால், எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சேதமடைந்த ரேஷன் கடையை இடித்துவிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய கட்டடம் கட்டித் தர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொற்பந்தல் கிராமத்தில் சேதமடைந்த ரேஷன் கடையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
சேதமடைந்த ரேஷன் கடையை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொற்பந்தல் கிராமத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடையை இடித்துவிட்டு, புதிதாகக் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




