உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பேரணாம்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பரிதாப பலி

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி தந்தை ரங்கநாதன், மகன் சுரேஷ் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி தந்தை ரங்கநாதன், மகன் சுரேஷ் உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Team - Editorial

இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
பேரணாம்பட்டு அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பரிதாப பலி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பல்லலகுப்பம் கிராமம் துலுக்கன்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன். இவர் தனது விவசாய நிலத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மகன் சுரேஷ் கறவை மாடுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், விவசாயப் பயிர்களை காட்டுப்பன்றிகளிடமிருந்து பாதுகாக்க ரங்கநாதன் தனது நிலத்தில் மின்வேலி அமைத்திருந்தார். இந்நிலையில், நேற்று மாலை பெய்த பலத்த மழை நின்ற பிறகு, மின்வேலி அருகே இருந்த அன்னக்கூடையை எடுக்கச் சென்ற ரங்கநாதன் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைப் பார்த்த அவரது மகன் சுரேஷ், தென்னை மட்டையைப் பயன்படுத்தி தந்தையைக் காப்பாற்ற முயன்ற போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில் சுரேஷும் பரிதாபமாக சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். இந்த தகவலறிந்து வந்த போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50