உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

பாலியல் புகாரில் விசாரணைக்கு வந்த போலீசாரைக் கண்டு மாடியில் இருந்து குதித்த நபர் உயிரிழப்பு

புழலில், பாலியல் சீண்டல் புகாரில் விசாரணைக்கு அழைக்கச் சென்ற போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ராஜபாண்டி, வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார்.

புழலில், பாலியல் சீண்டல் புகாரில் விசாரணைக்கு அழைக்கச் சென்ற போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ராஜபாண்டி, வீட்டு மொட்டை மாடியில் இருந்து குதித்து உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்த நிலையில், புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
பாலியல் புகாரில் விசாரணைக்கு வந்த போலீசாரைக் கண்டு மாடியில் இருந்து குதித்த நபர் உயிரிழப்பு!

சென்னை புழல், கதிர்வேடு செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவர் செங்கல்பட்டு மாவட்ட வணிக வரித்துறை அலுவலகத்தில் கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இவர், தனது வீட்டின் அருகே வசிக்கும் 37 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அந்தப் பெண் புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் பலமுறை அழைத்தும் ராஜபாண்டி செல்லவில்லை. இதையடுத்து, நேற்று காலை அவரது வீட்டிற்குச் சென்ற போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அவர் மொட்டை மாடிக்குச் சென்று கீழே குதிப்பதாக மிரட்டியுள்ளார்.போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது, ராஜபாண்டி மாடியில் இருந்து குதித்ததில் இடுப்பு, கை, கால்களில் எலும்பு முறிவு மற்றும் ரத்தக் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50