திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியைச் சேர்ந்தவர் அமலதாஸ். இவர் தனது உறவினர்களான நாகேந்திரன் மற்றும் அக்கினி ஆகியோருடன் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே தேத்தூரைச் சேர்ந்த கணேசனின் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். சிறுமலை அடிவாரத்தில் உள்ள அந்தத் தோட்டத்தில் கணேசனுக்குச் சொந்தமான ரூ.7 லட்சம் பணம் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. இதனை அமலதாஸ் மற்றும் அவருடன் வேலை பார்த்தவர்கள் திருடியதாகச் சந்தேகமடைந்த கணேசன், தனது நண்பர்களுடன் சேர்ந்து மூவரையும் கடத்திச் சென்று சோழவந்தான் அருகே வைத்து கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாங்கள் பணத்தைத் திருடவில்லை என்று அவர்கள் தெரிவித்தும் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. பின்னர் மூவரும் காரில் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களது ஊர்களில் இறக்கிவிடப்பட்டனர். காயமடைந்த அமலதாஸ் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். நாகேந்திரன், அக்கினி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.
பணத்தை திருடியதாக கூறி கூலித்தொழிலாளி அடித்துக் கொலை
திண்டுக்கல் அருகே ரூ.7 லட்சம் பணத்தைத் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி அமலதாஸ் உள்ளிட்ட மூவரைத் தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் அமலதாஸ் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே ரூ.7 லட்சம் பணத்தைத் திருடியதாகக் கூறி கூலித்தொழிலாளி அமலதாஸ் உள்ளிட்ட மூவரைத் தோட்ட உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கியதில் அமலதாஸ் உயிரிழந்தார். நாகேந்திரன் மற்றும் அக்கினி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




