நெல்லையில் இருந்து பாபநாசம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்து, பேருந்து நடத்துநராக பணியாற்றிய கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்தர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். மேலும், 20-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
நெல்லையில் அரசு பேருந்து லாரி மோதி விபத்து - நடத்துனர் பலி
பிரான்சேரி பகுதியில் அரசு பேருந்தும், மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் அருகே பிரான்சேரி பகுதியில் அரசு பேருந்தும், மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




