தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 21 ஆயிரத்து 665 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, டெங்கு பாதிப்பால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 301 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார். சென்னை வடபழனியில் நடைபெற்ற காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாமை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் தினமும் ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். சென்னையில் 3,700 கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பணியில் ஈடுபட உள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் ஏழு நாட்களுக்கு ஒருமுறை கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலம் தொடங்க உள்ளதால் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பொதுமக்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, கட்டுமான இடங்களில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தால், முதல் முறையாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
டெங்கு காய்ச்சலால் 21,665 பேர் பாதிப்பு - மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு
டெங்கு காய்ச்சலால் பாதிப்பு அதிகமானதால் 21,665 பேர் பாதிப்புக்குள்ளாகினர். மருத்துவ முகாமை அமைச்சர் அருண்ராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் இந்த ஆண்டு இதுவரை 21,665 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
