தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. மகளிருக்கான வெற்றி பயணம் திட்டத்தின் கீழ், 340 விரைவு மற்றும் சொகுசு புறநகர் அரசு பேருந்துகள் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண் பயணிகளுக்கு, பயணத் தூரத்தைப் பொறுத்து ரூ. 10 முதல் ரூ.15 வரை கட்டணம் குறைந்துள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மகளிர் இலவசப் பயணத் திட்டம், தற்போது வெற்றி பயணம் என்ற பெயரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண மற்றும் சொகுசுப் பேருந்துகளிலும், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் புறநகர் மற்றும் மலைப்பகுதி சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம்.அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, மொத்தம் 12 ஆயிரத்து 695 பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்தத் திட்டத்தின் கீழ், முன்பு 2,050 புறநகர் சாதாரணக் கட்டணப் பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 2,390 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், பெண்களுக்கு இலவசப் பயண வசதி கிடைப்பதுடன், குறிப்பிட்ட பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கும் கட்டணக் குறைவு கிடைத்துள்ளது. மேலும், இந்தப் பேருந்துகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் வெற்றி பயணம் ஸ்டிக்கர்களும் டிஜிட்டல் பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் வெற்றிப்பயண பேருந்துகளில் ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் குறைவு
வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் 340 அரசு பேருந்துகள் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன.
வெற்றி பயணம் திட்டத்தின் கீழ் 340 அரசு பேருந்துகள் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால், ஆண் பயணிகளுக்கு பயணத் தூரத்தைப் பொறுத்து ரூ.10 முதல் ரூ.15 வரை கட்டணம் குறைந்துள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
