உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நீலகிரியில் கனமழை - மண்சரிவில் சிக்கிய அரசு பேருந்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு மண்சரிவில் அரசு பேருந்து சிக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்சரிவில் அரசு பேருந்து சிக்கியதில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நீலகிரியில் கனமழை - மண்சரிவில் சிக்கிய அரசு பேருந்து

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குன்னூர்–மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வாகனங்கள் கோத்தகிரி சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டன. ஊட்டியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசு பேருந்து பர்லியார் அருகே மண்சரிவில் சிக்கியது. இந்த பேருந்தின் மீது மண்ணும் மரங்களும் விழுந்ததில் அது கடுமையாகச் சேதமடைந்தது. பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் ஆறு பயணிகள் இருந்தனர். மீட்புக் குழுவினர் நடத்துநரைப் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஓட்டுநர் மற்றும் பயணிகளின் நிலை குறித்து மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தொடர் மழையால் மலை ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பர்லியாரில் அதிகபட்சமாக 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரியின் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50