உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட நடவடிக்கை – MLA திலீப் அறிவிப்பு

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையை ரூ.50 லட்சம் செலவில் சீரமைத்து, 24 மணி நேர மருத்துவச் சேவையைத் தொடங்க MLA திலீப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனையை ரூ.50 லட்சம் செலவில் சீரமைத்து, 24 மணி நேர மருத்துவச் சேவையைத் தொடங்க MLA திலீப் நடவடிக்கை எடுத்துள்ளார். 2027ஆம் ஆண்டுக்குள் மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Team - Editorial

பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட நடவடிக்கை – MLA திலீப் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டம் பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற MLA திலீப், பழைய அரசு மருத்துவமனை மீண்டும் அதே இடத்தில் செயல்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். அதன்படி, தற்போது அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன், MLA திலீப் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கி வைத்தனர். மருத்துவமனைக் கட்டடத்தின் உறுதித்தன்மை ஆய்வு செய்யப்பட்டு, சீரமைக்க வேண்டிய பகுதிகள் கண்டறியப்பட்டன. இதற்காகச் ரூ.50 லட்சம் செலவாகும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. யுனைடெட் வெல்ஃபேர் டிரஸ்ட் நிறுவனம் சிஎஸ்ஆர் நிதி மூலம் உதவ முன் வந்துள்ளது. மருத்துவமனை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததும் அவசர சிகிச்சை, விஷக்கடி, நாய்க்கடி, பிரசவம் உள்ளிட்ட சேவைகள் 24 மணி நேரமும் வழங்கப்படும் என MLA திலீப் தெரிவித்தார். சீரமைப்புப் பணிகளை 45 முதல் 60 நாட்களுக்குள் முடிக்கவும், 2027ஆம் ஆண்டுக்குள் மருத்துவமனையை முழுமையாகப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50