நாமக்கல்லில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தச் சுவர், 50 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டதாகும்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு மைதானத்தின் பின்புறம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் அமைந்துள்ளன. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், நேற்று நள்ளிரவு பெய்த கனமழையின்போது மாவட்ட ஆட்சியர் குடியிருப்புக்கும், மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்புக்கும் இடையிலிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக, அப்போது யாரும் அங்கு இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, இடிபாடுகளை அகற்றி, புதிய தடுப்புச் சுவர் அமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல்லில் கனமழையால் மாவட்ட ஆட்சியர் குடியிருப்புச் சுவர் இடிந்து விழுந்து விபத்து
நாமக்கல்லில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
நாமக்கல்லில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால், மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தச் சுவர், 50 அடி நீளமும் 10 அடி உயரமும் கொண்டதாகும்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




