நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட வீனஸ் காலனியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் அதிமுக ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருவதுடன், நாமக்கல்லில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிலையில், 26-ம் தேதி இரவு 9.30 மணியளவில், நிதி நிறுவனப் பணிகளை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ரயில்வே நிலைய கூட்ஸ் செட் அருகே சென்றபோது, நான்கு மர்ம நபர்கள் அவரை வழிமறித்துள்ளனர். பின்னர், அவரை இருட்டான பகுதிக்கு இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் உள்ளிட்ட மொத்தம் 12 பவுன் நகைகளைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து செல்வம் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகியைத் தாக்கி 12 பவுன் நகை பறிப்பு
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகியைத் தாக்கி 12 பவுன் நகைகளைப் பறித்துச் சென்ற 4 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல்லில் அதிமுக நிர்வாகி செல்வத்தை வழிமறித்து தாக்கிய 4 மர்ம நபர்கள், அவர் அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




