தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி செயல்படும் மீன் கழிவு ஆலைகளால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இதனால், மீன் கழிவு ஆலைகளை அகற்ற வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடியில் மீன் கழிவு ஆலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விதிமுறைகளை மீறிச் செயல்படும் மீன் கழிவு ஆலைகளை உடனடியாக அகற்ற வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் ஆசிரியர் சங்கரநாராயணன் மீது தொடரப்பட்டதாகக் கூறப்படும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், கிராம மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், ஆண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தூத்துக்குடி மீன் கழிவு ஆலைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி செயல்படும் மீன் கழிவு ஆலைகளால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்
தூத்துக்குடி மாவட்டம் வாகைகுளம் அருகே உள்ள பொட்டலூரணி கிராமத்தைச் சுற்றி செயல்படும் மீன் கழிவு ஆலைகளால் சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




