உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் 462 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.14 லட்சம் பறிமுதல் – மூவர் கைது

தூத்துக்குடியில் சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 462 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு மூவர் கைது.

தூத்துக்குடியில் போலீசார் நடத்திய சோதனையில் 462 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.14 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Team - Editorial

இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:
தூத்துக்குடியில் 462 கிலோ புகையிலை பொருட்கள், ரூ.14 லட்சம் பறிமுதல் – மூவர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி புதுகாலனி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு அதிரடிப்படை போலீசார் ரகசிய தகவலின் பேரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்றிருந்த நபர்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, அவர்கள் பயன்படுத்தி வந்த குடோனில் போலீசார் சோதனை நடத்தியதில், சட்டவிரோத விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 462 கிலோ புகையிலைப் பொருட்கள், ரூ.14 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக மாரிராமன், ராமசுப்பு, ராஜ்குமார் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 496 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 7,612 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50