உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
விசில் மீடியா

தூத்துக்குடியில் ரூ.200 மளிகைப் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் – டோக்கன் தீர்ந்ததால் ஏமாற்றம்

தூத்துக்குடியில் ரூ.200 மளிகைப் பொருட்கள் வாங்க குவிந்த பொதுமக்களுக்கு டோக்கன் பற்றாக்குறையால் பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தீபாவளியை முன்னிட்டு தூத்துக்குடி கூட்டுறவு அங்காடியில் ரூ.200 மளிகைப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். போதிய பொருட்கள் இல்லாததால் 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு, பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

Team - Editorial

இப்போது வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:
தூத்துக்குடியில் ரூ.200 மளிகைப் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள் – டோக்கன் தீர்ந்ததால் ஏமாற்றம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.200-க்கு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையம் எதிரே உள்ள கூட்டுறவு அங்காடியில் பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் பொருட்களை வாங்குவதற்காக இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் அங்காடி முன்பு குவிந்தனர். ஆனால், போதிய அளவில் மளிகைப் பொருட்கள் வராததாலும், பாக்கெட்டுகள் தயாரிக்கப்படாததாலும் 200 பேருக்கு மட்டுமே டோக்கன்கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பொருட்கள் மற்றும் டோக்கன்கள் தீர்ந்துவிட்டதாக ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கூட்டுறவுத்துறையின் முறையான ஏற்பாடுகள் இல்லாததே இந்த நிலைக்குக் காரணம் என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அறிவித்த மளிகைப் பொருட்கள் தொகுப்பு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போதிய அளவில் பொருட்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய குறிச்சொற்கள்

எழுத்தின் அளவு

எழுத்து அளவு 18 பிக்சல்

Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.

தொடர்புடைய செய்திகள்

மேலும்
320 × 50