தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தியாகராய நகர் (தி.நகர்) பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.தி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அப்பகுதிகளில் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபடுபவர்கள், செயின் பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய போலீசார் சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக சுடிதார் அணிந்த பெண் போலீசார் மாறுவேடத்தில் பொதுமக்களுடன் கலந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சந்தேகத்திற்கிடமான நபர்களைத் தொடர்ந்து கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுதவிர, முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி தீபாவளி பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தி.நகர் கடைவீதிகளில் அதிரடி கண்காணிப்பு - மாறுவேடத்தில் பெண் போலீசார்
தி.நகரில் பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களைக் கண்காணிக்க சுடிதாரில் மாறுவேட பெண் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தி.நகரில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பெண்களிடம் சில்மிஷம் செய்பவர்களைப் பிடிக்க சுடிதாரில் மாறுவேட பெண் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




