சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வேலைக்காக தூத்துக்குடி சென்ற ஆனந்த், பின்னர் திருநெல்வேலியில் நண்பருடன் அறை எடுத்து தங்கியிருப்பதாக குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். பின்னர், மறுநாள் அவர் மாயமானார். இது குறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, கட்டுடையார் குடியிருப்பு குளத்தில் ஆனந்தின் உடல் மீட்கப்பட்டது. ஆனந்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆனந்துடன் பணிபுரிந்த தச்சநல்லூரைச் சேர்ந்த மகேஷ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சம்பவத்தன்று ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் ஒன்றாக மது அருந்தியதும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் ஆனந்தை பேருந்தில் ஊருக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். கட்டுடையார் குடியிருப்பு பகுதியில் ஆனந்துடன் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க நகையை இருவரும் பறித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அங்கையே ஆனந்தை விட்டுச் சென்ற நிலையில், மது போதையில் இருந்த அவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து மகேஷ் மற்றும் மாரியப்பன் ஆகிய இருவரையும் தாழையூத்து போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருநெல்வேலி அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்தவரின் 4 பவுன் நகை பறிப்பு – நண்பர்கள் 2 பேர் கைது
திருநெல்வேலி அருகே மது போதையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்தவரின் 4 பவுன் நகை பறித்த நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருநெல்வேலி அருகே மது போதையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த இளைஞரின் 4 பவுன் நகையை பறித்ததாக நண்பர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் விசாரணையின் அடிப்படையில் மகேஷ், மாரியப்பன் ஆகியோரை தாழையூத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




