திருநெல்வேலி மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்கும் வகையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, சேரன்மகாதேவி உட்கோட்ட டி.எஸ்.பி. அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில், வீரவநல்லூர் அருகே தெற்கு வீரவநல்லூர் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள காட்டுப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்த சங்கர்கணேஷ், மகாராஜன், ராகுல் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்ட சங்கர்கணேஷ் மற்றும் மகாராஜன் ஆகிய இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், பொதுச்சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் 25 கிலோ கஞ்சா பறிமுதல் – மூவர் கைது
திருநெல்வேலி வீரவநல்லூர் அருகே 25 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 25 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உள்பட மூவரை கைது செய்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




