திருச்செந்தூர் அருகே கோவிலில் இருந்த இரண்டு குத்துவிளக்குகளை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே காயாமொழி வடக்கு குமாரசாமிபுரத்தில் மந்திரமூர்த்தி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரி பூஜை செய்வதற்காக சென்றபோது, அங்கிருந்த இரண்டு குத்துவிளக்குகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதையடுத்து கோவிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிவப்பு நிற துண்டை தலையில் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், கோவிலுக்குள் இருந்த இரண்டு குத்துவிளக்குகளையும் திருடிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவம் குறித்து காவல் நிலயத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே கோவிலில் இரண்டு குத்துவிளக்குகள் திருட்டு
திருச்செந்தூர் அருகே கோவிலில் இருந்த இரண்டு குத்துவிளக்குகளை மர்ம நபர் திருடிச் சென்றனர்.
திருச்செந்தூர் அருகே கோவிலில் இருந்த இரண்டு குத்துவிளக்குகளை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




