திண்டுக்கல் அருகே 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றி சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரியில் இருந்து ஹைட்ரோகுளோரிக் அமிலம் கசியத் தொடங்கியதுடன், அதிகளவில் புகைமூட்டமும் உருவானது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், ஹைட்ரோகுளோரிக் அமிலக் கசிவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, லாரியின் மீது தண்ணீரைப் பாய்ச்சி அமிலத்தின் வீரியத்தைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக சிறிது நேரத்தில் அமிலத்தின் வீரியம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.சாலையில் சென்ற லாரியில் இருந்து திடீரென அபாயகரமான அமிலம் கசிந்து புகைமூட்டம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
திண்டுக்கல் அருகே 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றி வந்த லாரியில் கசிவு!
திண்டுக்கல் அருகே 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றி வந்த லாரியில் கசிவு ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.
திண்டுக்கல் அருகே 25 ஆயிரம் லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் ஏற்றி வந்த லாரியில் கசிவு ஏற்பட்டு புகைமூட்டம் உருவானது. தீயணைப்புத் துறையினர் தண்ணீரைப் பாய்ச்சி அமிலத்தின் வீரியத்தைக் கட்டுப்படுத்தினர்.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




