திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி அருகே சின்னமாக் கொட்டம் பகுதியில் கால்நடை விவசாயி ஒருவர் பட்டி அமைத்து ஏராளமான ஆடுகளை வளர்த்து வந்துள்ளார்.இந்நிலையில், இரவு நேரத்தில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள், அங்கிருந்த ஆடுகளைக் கடித்துக் குதறியுள்ளன. இதில் 17 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்ததுடன், மேலும் 5 ஆடுகள் பலத்த காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, அப்பகுதியில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், 17 ஆடுகள் உரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பபகுதி பொதுமக்களும், கால்நடை வளர்ப்போரும் கோரிக்கை விடுத்துள்ளனர். .
திண்டுக்கல் அருகே தெருநாய்கள் கடித்து 17 ஆடுகள் பலி
திண்டுக்கல் அருகே பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன.
திண்டுக்கல் சீலப்பாடி அருகே பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் கடித்ததில் 17 ஆடுகள் உயிரிழந்தன. மேலும் 5 ஆடுகள் படுகாயமடைந்தன. தெருநாய்களைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




