திண்டுக்கல் மாவட்டம் திருமலைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி லாவண்யா. இவருக்கும் மனைவிக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், லாவண்யாவுக்கும் எமக்கலாபுரத்தைச் சேர்ந்த துளசிமணி என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதனை முத்துக்குமார் கண்டித்ததால் கோபமடைந்த லாவண்யா, தனது கள்ளக்காதலன் துளசிமணி மற்றும் அவரது நண்பர் அழகுசின்னு ஆகியோருடன் சேர்ந்து முத்துக்குமாரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்றதுடன், சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த முத்துக்குமார் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான தனிப்படையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கொலை முயற்சியில் ஈடுபட்டதாக மனைவி லாவண்யா, துளசிமணி, அழகுசின்னு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், இச்சமபவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் கணவரைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற மனைவி - மூவர் கைது
திண்டுக்கல்லில் கணவரைக் கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்ற மனைவி உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயன்ற மனைவி லாவண்யா, கள்ளக்காதலன் துளசிமணி மற்றும் அவரது நண்பர் அழகுசின்னு ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




