நாமக்கல் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு அவ்வப்போது வலிப்பு ஏற்படுவதால் மருந்து, மாத்திரைகள் எடுத்துவந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக அவற்றை எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், குடித்தெருவில் உள்ள கோவில் மீது ஏறிக் குதித்த சண்முகம், அப்பகுதியில் சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் கண்ணாடிகள் மீது கற்களை வீசியதாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, தனது தாய் தேனைத் தலைமுடியைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளி, கல்லால் தாக்க முயன்றுள்ளார். அபோது, அருகில் இருந்த அக்கம்பக்கத்தினர் தாயைக் காப்பாற்றிய நிலையில், ஆவேசமடைந்த சண்முகம் இரண்டு முதியவர்களின் தலையிலும் கல்லால் தாக்கியுள்ளார். இதையடுத்து, காயமடைந்த இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயைக் கல்லால் தாக்க முயன்ற மகன் - தடுக்க வந்த 2 முதியவர்கள் மீது தாக்குதல்
சிபுரம் அருகே தாயைத் தாக்க முயன்றதுடன், தடுக்க வந்த இரண்டு முதியவர்களைக் கல்லால் தாக்கியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தாயைத் தாக்க முயன்றதுடன், தடுக்க வந்த இரண்டு முதியவர்களைக் கல்லால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




