சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தவெக எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர்.இதை தொடர்ந்து, அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாகப் பதவியேற்ற இருவரும், 10 நாட்களில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல் 20,040 வாக்குகள் வித்தியாசத்திலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று உள்ளனர். இதன் மூலம் சட்டசபையில் தவெகவின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ், அருண்ராஜ், மரிய வில்சன்,ராஜ்மோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகிய முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தவெக எம்எல்ஏக்களாக மரகதம் குமரவேல், சத்தியபாமா பதவியேற்பு
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற பதியேற்பு நிகழ்ச்சியில் மரகதம் குமரவேல் , சத்தியபாமா இருவரும் தவெக எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மதுராந்தகம் தொகுதி மரகதம் குமரவேல், தாராபுரம் தொகுதி சத்தியபாமா ஆகியோர் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் தவெக எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




