நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், கோத்தகிரி நகரின் முக்கியப் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே கரடி ஒன்று நடமாடியது. பின்னர், அருகிலுள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்ததால் அங்கிருந்த நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இதையடுத்து,மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் சுற்றித்திரிந்த கரடி, பின்னர் அருகிலுள்ள சோலைப் பகுதிக்குள் சென்றது. இதனால் காவல் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால் பள்ளி மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, கரடிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், குடியிருப்புப் பகுதிகளுக்குள் அடிக்கடி வரும் கரடிகளைக் கூண்டு வைத்துப் பிடித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கரடி புகுந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் கரடி புகுந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மக்கள் அதிகம் கூடும் நகர்ப்புறப் பகுதிகளிலும் கரடிகள் நடமாடுவதால், அவற்றைக் கண்காணித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
