பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் போராட்டம் நடத்தச் சென்ற மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட முயலும் மருத்துவப் பணியாளர்களைக் கைது செய்வது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விவசாயிகள், மாணவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் ஜனநாயக வழியில் போராடும்போது, அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக அடக்குமுறையை ஏவுவது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவப் பணியாளர்களை உடனடியாக விடுவித்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவ பணியாளர்கள் கைதுக்கு உதயநிதி கண்டனம்
மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்
மருத்துவப் பணியாளர்களை வீட்டுக்காவலில் வைத்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். பணி நிரந்தரக் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:





