தர்மபுரி மாவட்டம் பண்ணைகாரன் கொட்டாயைச் சேர்ந்தவர் அஜய்குமார். இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு திருமண விழா மேடைகளில் பூ அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் உறவினர் ஜெயசூர்யா என்பவரை அழைத்துக்கொண்டு சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுள்ளார். அப்போது, தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயில் அருகே பழுதாகி நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் மீண்டும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜய்குமார், நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இச்சம்பவ,ம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - ஒருவர் பலி
தர்மபுரி அருகே பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அஜய்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தர்மபுரி அருகே பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அஜய்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடன் சென்ற உறவினர் ஜெயசூர்யா காயமடைந்தார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
