தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வாசிகவுண்டனூர் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்கின்றனர். இப்பகுதி பொதுமக்-களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நிர்வாகம் சார்பில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 3 மாதமாக ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மற்றும் உப்பு தண்ணீர் எதுவும் வழங்கப்படவில்லை என, பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இது குறித்து, நிர்வாகத்திடமும், ஒன்றிய அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள், நேற்று காலை, பொம்மிடி - அரூர் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பொம்மிடி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து, பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
தர்மபுரி குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொம்மிடி அருகே வாசிகவுண்டனூர் பகுதியில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Team - Editorial
இந்த வாரம் வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




