தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 65 Anti-Narcotics Task Force பிரிவுகளை உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக ரூ.264.14 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஏற்கனவே போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வரும் NIB-CID அமைப்பின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி வெளியான அரசாணையின்படி, 65 ANTF களப்பிரிவுகளுக்கு 65 காவல் ஆய்வாளர்கள், 260 உதவி ஆய்வாளர்கள், 1,300 காவலர்கள் என மொத்தம் 1,625 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தலைமையகத்துக்கு 454 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் புதிதாக உருவாக்கப்படுமா அல்லது ஏற்கனவே பணியில் உள்ள காவலர்கள் மாற்றப்படுவார்களா என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை. இதை தொடர்ந்து, பல காவல் நிலையங்களில் ஆள்பற்றாக்குறை நிலவும் நிலையில், காவலர்களை புதிய பிரிவுகளுக்கு மாற்றினால் சட்டம் ஒழுங்கு, ரோந்துப் பணி மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பாதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும், NIB-CID தொடர்ந்து தனிப்பிரிவாகச் செயல்படுமா அல்லது ANTF அமைப்புடன் இணைக்கப்படுமா என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட வேண்டும். பின்னர், புதிய பிரிவுகளுக்கான பணியாளர் நியமனம், NIB-CID அமைப்பின் எதிர்காலம் மற்றும் காவல் நிலையங்களின் ஆள்பலம் குறித்து தமிழ்நாடு அரசு வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 65 புதிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுகள் NIB-CID நிலை என்ன?
தமிழ்நாட்டில் 65 புதிய ANTF பிரிவுகள் அமைக்கப்படும் நிலையில், NIB-CID எதிர்காலம் மற்றும் காவல் நிலையங்களில் ஆள்பற்றாக்குறை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
போதைப்பொருள் தடுப்புக்காக தமிழ்நாட்டில் 65 ANTF பிரிவுகள் உருவாக்கப்பட உள்ள நிலையில், ஏற்கனவே செயல்படும் NIB-CID நிலை என்னவாகும், காவல் நிலையங்களில் பணியாளர் பற்றாக்குறை அதிகரிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
Team - Editorial
பழைய செய்தி1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




