டெல்லிக்குள் மக்கள் நுழைவது தடுக்கப்படுகிறது, அது ஒரு சிறைச்சாலைபோல மாற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி, கைது செய்வதாகக் கூறி மத்திய அரசுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து, தேர்தல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளனர். டெல்லியில் போராட்டக்காரர்கள் வருவதைத் தடுக்க ரயில்கள், பேருந்துகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, தலைநகர் சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக விமர்சித்தார். மேலும், போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
டெல்லி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ல்லிக்குள் மக்கள் நுழைவது தடுக்கப்படுகிறது, அது ஒரு சிறைச்சாலைபோல மாற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்படுவதற்கும், தேர்தல் முறைகேடு புகார்களுக்கும் எதிராக அவர் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




