திருவொற்றியூர் அருகே எர்ணாவூர், பாரதியார் நகரை சேர்ந்தவர் கவியரசு. இவரது மகன் அஜய். ஜெய்ஹிந்த் நகரை சேர்ந்தவர் சஞ்சய். நண்பர்களான இருவரும் கவரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் அஜய், சஞ்சய் மற்றும் உடன் படிக்கும் கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரைக்கு வந்தனர். அங்கு கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி அஜய், சஞ்சய் ஆகிய இருவர் கடலில் மூழ்கியுள்ளனர். இதைக் கண்ட மற்ற நண்பர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீனவர்கள் மற்றும் மீட்புப் படையினர் கடலில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எண்ணூர் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
சென்னை எண்ணூர் பாலம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த பொறியியல் கல்லூரி மாணவர் அஜய்யின் உடல் கரை ஒதுங்கியது
சென்னை எண்ணூர் பெரியகுப்பம் கடற்கரையில் ராட்சத அலையில் சிக்கி அஜய், சஞ்சய் ஆகிய இரு நண்பர்கள் கடலில் மூழ்கினர். இதில் அஜய் உயிரிழந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு:

தொடர்புடைய குறிச்சொற்கள்
எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.




