கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம், கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே மதுபோதையில் அதிவேகமாக மினி கூப்பர் காரை ஓட்டிச் சென்ற 19 வயது இளைஞர், இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் இரண்டு இளம்பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வயநாடு பகுதியைச் சேர்ந்த தேவிகா, பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கோபிகா மற்றும் கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா பகுதியைச் சேர்ந்த இஜாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் திருக்காக்கரை பகுதியில் உள்ள கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தனர். இரவு பணி முடித்த மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அதிகாலை 2 மணியளவில் விமான நிலையம் அருகே உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திவிட்டு, மீண்டும் தங்களது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றனர். அப்போது, பின்னால் அதிவேகமாக வந்த மினி கூப்பர் கார், அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில் பலமாக மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இதையடுத்து, சிகிச்சை பலனின்றி மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய சுஹைல் சஜீவ் என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அவர் மதுபோதையில் வாகனம் ஓட்டினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், விபத்து தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் மினி கூப்பர் கார் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து - மூவர் உயிரிழப்பு
கேரளாவில் மதுபோதையில் 19 வயது இளைஞர் மினி கூப்பர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
கொச்சி சர்வதேச விமான நிலையம் அருகே மதுபோதையில் அதிவேகமாக மினி கூப்பர் காரை ஓட்டிச் சென்ற 19 வயது இளைஞர், ஸ்கூட்டர் மீது மோதிய விபத்தில் இரண்டு இளம்பெண்கள் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தனர்.
Team - Editorial
இன்று வெளியானது1 நிமிட வாசிப்பு
வெளியீடு: புதுப்பிப்பு:

எழுத்தின் அளவு
எழுத்து அளவு 18 பிக்சல்
Found an error in this article? Submit a correction request. Verified changes are recorded transparently.
